லட்சத்தீவில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது – கமல்ஹாசன்

லட்சத்தீவுகளில் நிம்மதி திரும்ப வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

லட்சத்தீவுகளின் நிர்வாகி பிரஃபுல் கோடா படேலின் பல்வேறு நடவடிக்கைகள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன. அவரின் புதிய உத்தரவுகள் லட்சத்தீவுகளில் வாழும் பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகள் அவரைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், லட்சத்தீவுகளின் நிர்வாகி பிரஃபுல் கோடா படேல் நிறைவேற்றி வரும் மசோதாக்கள் மக்கள் விரோத சட்டங்களாக குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதால் அமைதியற்ற சூழல் நிலவி வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது அறிக்கையில், லட்சத்தீவு மக்களின் நிம்மதியை சீர்குலைக்கும் செயல்பாடுகளை உடனே நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே