குடும்பத்தினருடன் வந்து வாக்களித்த சச்சின் டெண்டுல்கர்

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் மும்பையின் பாந்த்ரா மேற்கு தொகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் மனைவி அஞ்சலி மற்றும் மகன் அர்ஜுன் ஆகியோர் உடன் சச்சின் டெண்டுல்கர் சென்றார்.

அப்போது வரிசையில் நின்ற அவரிடம் பெண் தேர்தல் அதிகாரி ஒருவர் சச்சின் டெண்டுல்கர் இடம் தான் வைத்திருந்த கிரிக்கெட் பந்தில் ஆட்டோகிராப் வாங்கினார்.

பின்னர், வாக்களித்த சச்சின் வாக்குச் சாவடியில் இருந்து வந்து தான் ஜனநாயக கடமையையாற்றி விட்டதாக அடையாளமிட்ட விரலை காண்பித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே