எடை குறைவான செயற்கைக்கோளைத் தயாரித்த தஞ்சை மாணவர்-க்கு டிடிவி தினகரன் வாழ்த்து..!!

உலகிலேயே மிகவும் எடை குறைவான செயற்கைக்கோள்களைத் தயாரித்து சாதனை படைத்திருக்கும், தஞ்சை கரந்தை பகுதியைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ரியாஸ்தீன்-க்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உலகிலேயே மிகவும் எடை குறைவான செயற்கைக்கோள்களைத் தயாரித்து சாதனை படைத்திருக்கும் தஞ்சை கரந்தை பகுதியைச் சேர்ந்த பொறியியல் மாணவர் திரு.ரியாஸ்தீன் அவர்களுக்கு பாராட்டுகள்.

இவர் கண்டறிந்த விஷன் சாட் V1 மற்றும் V2 ஆகிய இரண்டு Femto செயற்கைக்கோள்களை அமெரிக்காவின் நாசா நிறுவனம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவ இருப்பது தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் பெருமையாகும்.

இந்தச் சாதனையைப்புரிந்துள்ள தம்பி ரியாஸ்தீன் விண்வெளித்துறையில் மேலும் பல வெற்றிகளைக் குவிக்க மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.” என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே