பாஜகவை சாடும் பா.ரஞ்சித்!

திருமாவளவனை தரம்தாழ்த்தும் பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறபோவதில்லை என்று இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாட்டில் பேசிய திருமாவளவன், அயோத்தி தீர்ப்பு குறித்து தனது விமர்சனத்தை முன் வைத்தார்.

அப்போது பேசிய அவர் பாபர் மசூதி இருந்த இடத்தில் தொல்லியல்துறை நடத்திய ஆராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் அந்த ஆய்வில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. ஆனால் அந்தக் கட்டமைப்பை வைத்து அறியலாம்.

குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும், கூம்பு போல அதன் அமைப்பு இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும், அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் என்றும் பேசினார்.

அதற்கான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

பின்னர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட திருமாவளவன், எனது பேச்சில் ஒரு சில சொற்கள் இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக உள்ளது என்று சிலர் என்னிடம் கூறினர்.

அவை உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை.

உண்மை உண்டு என்பதை எனது நண்பர்கள் அறிவர். எனினும் அதற்கான நான் வருந்துகிறேன் என்றார்.

இந்நிலையில் பாஜக ஆதரவு நிலைப்பாடு உள்ளவர்கள் பலரும் சமூகவலைதளங்களில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித், ஒரு கருத்தையொற்றி எதிர்வைக்கப்படும் விமர்சனம் விவாதத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஆனால் இங்கு விமர்சனங்களாக வசைகள், தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவதூறு நிகழ்த்தப்படுவது இவர்களுக்கு பண்பாடாகவே இருக்கிறது.

திருமாவளவனை தரம்தாழ்த்தும் பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறபோவதில்லை என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே