உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடத் தயார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளவக்கல் அணையில் நீர் திறந்துவிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, பாஜக, தேமுதிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டு அவர்களின் பலத்தை காட்டட்டும் என்றார்.
ரஜினி கமல் ஒன்று சேர்ந்தாலும் அவரது ரசிகர்கள் சேரமாட்டார்கள் எனவும், ரசிகர்கள் மத்தியில் பல பிரச்னைகள் உள்ளது எனவும் தெரிவித்தார்.
ரஜினி, கமல் ஒரு முடிவு எடுத்தால் மக்கள் ஒரு முடிவு எடுப்பார்கள். அதிமுக தான் வெல்லும் என அவர் தெரிவித்தார்.