தமிழகத்தில் இனி திமுக vs அதிமுக இல்லை.. பாஜக vs திமுக என மாறியுள்ளது: வி.பி.துரைசாமி!!

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி என தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய கட்சி என்பதால் பாஜக தலைமையில் தான் கூட்டணி எனக் கூறியுள்ளார். தமிழகத்தில் இனி பாஜக vs திமுக என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எங்களுடன் அனுசரித்து செல்பவர்களுடன் தான் கூட்டணி என விபி துரைசாமி தெரிவித்துள்ளார்.

இன்று காலையில் தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி, தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவின் தலைமையில்தான் கூட்டணி அமையும்.

மத்தியில் ஆட்சியில் இருப்பதால் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்கும். அதேபோல் தமிழகத்தில் அதிமுக-திமுக இடையே போட்டிதான் இதுவரை நிலவி வந்தது, இனிமேல் பாஜக-திமுக போட்டியாக இருக்கும் எனவும் கூறினார்.

ஒருபுறம் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கருத்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது வி.பி துரைசாமி இந்த தகவலை செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே