உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி முடிவாகவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி என்பது வேலை செய்யாது என்பதை அனுபவப் பூர்வமாக பார்த்துள்ளோம் என்று பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க கூட்டணியில் இருந்த பா.ஜ.க தற்போது மோதல் போக்கை கடைபிடிக்கிறது.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த பா.ஜ.க தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன், உள்ளாட்சித் தேர்தலின்போது லட்சத்துக்கு அதிகமான வேட்பாளர்களைக் களமிறக்கவேண்டும் என்பது எங்களது விருப்பமாக இருந்துவருகிறது.

உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி இதுவரையில் அமைக்கப்படவில்லை.

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து தேசியத் தலைமைதான் முடிவு செய்யும்.

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி என்பது வேலை செய்யாது என்பதை அனுபவப் பூர்வமாக பார்த்துள்ளோம் என்று தெரிவித்தார்.

பொன்.ராதாகிருஷ்ணனின் பேச்சு அரசியல்களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே