நடிகர் அஜித் மற்றும் ஷாலினி தம்பதியினரின் 20வது திருமண நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
வரும் மே 1ம் தேதி அஜித் பிறந்த நாள் வருகிற நிலையில், அதற்கு ஒருவாரத்திற்கு முன்னதாகவே தல ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்கவிட அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக இந்த திருமண நாள் கொண்டாட்டம் அமைந்துள்ளது.
காலையிலேயே #HappyWeddingDayAJITHSHALINI என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
இயக்குநர் சரண் இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்த அஜித் மற்றும் நடிகை ஷாலினி இடையே மலர்ந்த காதல், 2000ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கோலிவுட்டின் மிகப்பெரிய திருமணமாக நடைபெற்றது.
இன்று அஜித் – ஷாலினி தம்பதியினர் தங்கள் 20ம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடி வருகின்றனர்.
கோலிவுட்டின் பாக்ஸ் ஆஃபிஸ் மன்னனாக வலம் வரும் நடிகர் அஜித்தின் திருமண நாளை அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து நிறைத்து வருகின்றனர்.
கோலிவுட்டின் க்யூட் ஜோடிகளில் தல அஜித் மற்றும் ஷாலினிக்கு தனி இடம் எப்பவுமே உண்டு என்பதையும், பல அழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் நிரூபித்து வருகின்றனர்.
அமர்க்களம் படத்தில் இணைந்த இந்த காதல் ஜோடி, 20 ஆண்டுகளை கடந்தும் அன்பான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
இன்னும் பல வருஷம், சிறப்பான வாழ்க்கையை வாழ ரசிகர்கள் விஸ்வாசம் படத்தில் அஜித் பேசும் லாங் லிவ்.. ஹேப்பி லைஃப் எனும் வசனத்தை பதிவிட்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
HappyWeddingDayAJITHSHALINI என்ற ஹாஷ்டேக் முழுவதும் அஜித் – ஷாலினி திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நிறைந்து கல்யாண ஆல்பமாகவே காட்சி தருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, அஜித் – ஷாலினி திருமணத்திற்கு வாழ்த்து சொல்லும் புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
“கொண்டாடி தீர்ப்பதல்ல காதல்.. தீர்ந்திடா வண்ணம் கொண்டாடப்படுவதே காதல்! இன்று வரையிலும் சிறந்த காதல் ஜோடிகள் என்றால் நம் நினைவில் வருவது அண்ணனும் அண்ணியும் தான்” என தல ரசிகர்கள் அஜித் – ஷாலினி திருமணத்தின் போது பல பிரபலங்கள் வந்து வாழ்த்து சொல்லிய ஒட்டுமொத்த புகைப்பட தொகுப்புகளையும் பதிவிட்டு கவிதை மழையில் வாழ்த்தி வருகின்றனர்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை விட்டு விட்ட நடிகை ஷாலினி, தனது குடும்பத்தை கவனித்து வருகிறார்.
அனோஷ்கா, ஆத்விக் என அஜித் – ஷாலினி தம்பதியினருக்கு இரண்டு அழகிய குழந்தைகள் இருக்கின்றனர்.
டிராக்கில் வேகமாக ரேஸ் பைக் ஓட்டினாலும், தனது குழந்தைகளுக்காக டயர் ஓட்டும் தல அஜித்தின் எளிமை தான் அந்த அழகான குடும்பத்தின் வலிமை.