கடந்த 1978ஆம் ஆண்டு கமல் ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான படம் ‘அவள் அப்படித்தான்’. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.
பிரபல இயக்குனரான பத்ரி வெங்கடேஷ் இந்த படத்தை தற்போது ரீமேக் செய்ய உள்ளதாக தெரிகிறது. இந்த இயக்குனர் அதர்வா நடித்த பானா காத்தாடி, செம போத ஆகாதே போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஸ்ரீபிரியா நடித்த கதாபாத்திரத்தில் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கமல்ஹாசன் வேடத்தில் துல்கர் சல்மானும், ரஜினி வேடத்தில் மேலும் ஒரு பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
- ஒரு மாணவிக்காக 73 பேர் செல்லும் ஒரு படகையே இயக்கும் கேரள அரசு! சென்று வர கட்டணம் 18 தான்!
- இறுதிச் சடங்கில் 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி!