குற்றால அருவியில் குளிக்க இரண்டாவது நாளாக தடை

தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பெய்யும் மழை காரணமாக குற்றால அருவியில் குளிக்க இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டை, புளியரை, கடையாநல்லூர் பகுதிகளில் பெய்த தொடர் மழையால் குற்றால மெயின் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

இதனால் குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

எனினும் சிலர் சில்லென்று வீசும் குளிர்ந்த காற்றை மழையில் நனைந்தபடி அனுபவித்து செல்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே