சென்னை அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நடப்பு ஆண்டில்  இயல்பை விட 2 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 64 சதவிகிதமும், பெரம்பலூர் மாவட்டத்தில் 28 சதவிகிதம் குறைவாகவும் மழை பெய்துள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிண்டி, ஆலந்தூர், மடிப்பாக்கம், மேடவாக்கம், துரைப்பாக்கம், அடையாறு, வேளச்சேரியில் மற்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே