வடகிழக்குப் பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணிநேரத்திற்கு மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாவூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகக் கூடும்.

கடந்த 24 மணிநேரத்தில் பட்டுக்கோட்டை, திருமயத்தில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது. உசிலம்பட்டி, ஒரத்தநாட்டில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி முடிந்த பின்னர் வரும் 28ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே