அமெரிக்கா செல்கிறார் துணை முதலமைச்சர்

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அடுத்த வாரம் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, துபாய், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் அமெரிக்கா செல்லவுள்ளார்.

நவம்பர் ஏழாம் தேதி அமெரிக்கா செல்லும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அங்கு  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தான ஆலோசனைக் கூட்டங்களிலும் பங்குபெறவுள்ளார் என்று கூறப்படுகிறது.

அவருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் அமெரிக்கா செல்லவுள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே