2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக – பாஜகவின் வெற்றிக் கூட்டணி தொடரும் என துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் அமித் ஷா முன்னிலையில் உரையாற்றிய ஓ. பன்னீர்செல்வம், அதிமுக – பாஜக வெற்றிக் கூட்டணி இனிவரும் தேர்தல்களிலும் தொடரும் என்று தெரிவித்தார்.

வேல் யாத்திரை போன்ற விவகாரங்களில் அதிமுக, பாஜக இடையே முரண்பாடு இருந்து வந்த நிலையில், பேரவைத் தேர்தலில் கூட்டணி நிலைமை குறித்த கேள்விகள் இருந்து வந்தன. 

இந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே