ரஜினியிடம் நலம் விசாரித்தார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை..!!

சகோதரர் ரஜினிகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்ததாக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

அண்ணாத்த படப்பிடிப்பின்போது 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், நடிகர் ரஜினிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்பொழுது அவருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்தநிலையில், ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் உடல்நிலை குறித்து அரசியல் தலைவர் உட்பட பலரும் கேட்டறிந்த நிலையில், தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டறிந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர், “ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையை தொடர்பு கொண்டு சகோதரர் ரஜினிகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தேன்.

அவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று விரும்புகிறேன், பிரார்த்திக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே