வங்கக்கடலில் ஆக.19ம் தேதி “குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி” உருவாக வாய்ப்பு: வானலை மையம்!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக கோவை, நீலகிரி, வேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுர், திருவள்ளூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்” எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடலோரப் பகுதியில் வரும் ஆகஸ்டு 19ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

  • ஆகஸ்டு 17, 18: வடக்கு வங்கக்கடல், ஒடிசா மற்றும் மேற்குவங்க கடலோர பகுதிகயில் பலத்த காற்று 40-50 கி.மீ வேகத்திலும், தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
  • ஆகஸ்டு 19: வடக்கு வங்கக்கடல், ஒடிசா மற்றும் மேற்குவங்க கடலோர பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
  • ஆகஸ்டு 17 முதல் 19: கர்நாடகா முதல் குஜராத் கடலோர பகுதி வரை, பலத்த காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
  • ஆகஸ்டு 19 முதல் 21: தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்

எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 17.08.2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 2.5 முதல் 3.1 மீட்டர் வரை எழும்பக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே