அரியர் தேர்வுகள் ரத்து வழக்கு விசாரணையின் போது காணொலியில் 100க்கும் மேற்பட்டோர் வந்ததால் விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது.

அரியர் தேர்வு ரத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், யூஜிசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில், அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.இந்த விசாரணை ஆன்லைன் மூலமாக நடைபெற்றது.

எனவே அரியர் தேர்வுகள் ரத்தை எதிர்த்த வழக்கு விசாரணையை கவனிக்க நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆன்லைன் விசாரணையில் Log In செய்ததால் இடையூறு ஏற்பட்டது.

இதனால் வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டது.

மாணவர்களின் பேச்சு, ஒலி உள்ளிட்ட காரணங்களால் விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

அப்பொழுது விசாரணையில் இருந்த நீதிபதிகள், மாணவர்கள் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே