வலிமை படப்பிடிப்பு தளத்தில் அஜித்துக்கு மீண்டும் காயம்..!!

ஆந்திராவில் நடைபெற்ற வலிமை படப்பிடிப்பில் தல அஜித்துக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு மீண்டும் அஜித்தின் வலிமை படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரோஷி நடித்து வருகிறார்.

இந்த வேளையில் , நடிகர் அஜித்துக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் மீண்டும் விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

அதையடுத்து அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஆயுர்வேத சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன என பல தகவல்கள் பரவி வருகின்றன.

ஆயினும் , அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் விசாரித்தபோது, பெரிய விபத்து இல்லை என்றும், கையில் லேசான காயம் மட்டுமே, ஆனால், படப்பிடிப்பு ஏதும் தடைபடவில்லை என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே