ஐஎஸ்எல் கால்பந்தாட்ட தொடர் இன்று தொடக்கம்..; கொல்கத்தா – கேரளா மோதல்..!!

11 அணிகள் பங்கேற்கும் நடப்பாண்டிற்கான ஐ.எஸ்.எல் எனப்படும் கால்பந்தாட்டத் தொடர், இன்று தொடங்குகிறது.

கோவாவில் நடைபெறும் முதல் போட்டியில், 3 முறை சாம்பியனான கொல்கத்தா மற்றும் கேரளா அணிகள் மோத உள்ளன.

கொரோனா முன்னெச்சரிக்கையாக, இந்த தொடரில் போட்டியை பார்வையிட ரசிகர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

இன்று தொடங்கும் லீக் போட்டிகள் ஜனவரி 11-ந் தேதி வரையில் நடைபெற உள்ளன. எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே