தில்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், 500-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
அதேமசயம் கரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,252-ஆக உயர்ந்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து 2,800-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் தில்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லி ராஷ்டிரபதி பவனில் உள்ள 125 குடும்பங்களும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள மத்திய சுகதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.