#BREAKING : மருத்துவ மேற்படிப்புகளில் OBCக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவப் படிப்பில் 50% இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பல இடங்களை இழந்துள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது.

இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என கூறி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் OBC பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்,ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடாது.

மாநில அரசின் கொள்கை என்ற அடிப்படையில் தமிழகம் தொடர்பான இடஒதுக்கீட்டிற்கு சென்னை உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் கூறியது.

இதன் பின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.

இதுகுறித்து மனுதாரர் மற்றும் எதிர்மனுதார் எழுத்துப்பூர்வ பதில் அளிக்கலாம் என நீதிபதிகள் கூறிய நிலையில், 50% இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் எழுத்துப்பூர்வ பதில் அளித்தது.

இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே பொருந்தும்; உச்ச நீதிமன்ற ஒப்புதல் இல்லாமல் மாணவர் சேர்க்கை நடைமுறையில் மாற்றம் செய்ய முடியாது என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.அப்பொழுது இந்திய மருத்துவ கவுன்சிளின் வாதத்தை ஏற்க முடியாது.

மேலும் மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீட்டில்ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தர சட்டம் இயற்றலாம்.

மேலும் மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஒபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரிதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் இல்லை.

மேலும் இது தொடர்பாக 3 மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு வழங்க சட்டரீதியாக தடை இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது சென்னை உய்ரநீதிமன்றம்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே