இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,656-லிருந்து 18,601-ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,656- லிருந்து 18,601 ஆக உயர்ந்துள்ளது.
இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 559- லிருந்து 590 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,842- லிருந்து 3,252 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 4,666 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 572 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 232 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் டெல்லியில் 2,081, குஜராத்தில் 1,939, ராஜஸ்தானில் 1,576, தமிழகத்தில் 1,520, மத்திய பிரதேசத்தில் 1,485, உத்தரப்பிரதேசத்தில் 1,184, தெலங்கானாவில் 873, கேரளாவில் 408, ஆந்திராவில் 722, கர்நாடகாவில் 408, புதுச்சேரியில் 7 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1336 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 47 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.