ஜனவரி 17ல் ஜிசாட்30 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது

இஸ்ரோவின் ஜிசாட்30 செயற்கைக்கோள், தென்அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து வரும் 17ஆம் தேதி அதிகாலை ஏவப்பட உள்ளது.

ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்4ஏ செயற்கைக்கோளுக்கு பதிலாக ஜிசாட்-30 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.

3 ஆயிரத்து 357 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியான்-5 ராக்கெட் மூலம், வரும் 17ஆம் தேதி அதிகாலை 2.35 மணிக்கு ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த ஜிசாட்30 செயற்கைக்கோளானது Ku-band-ல் இந்திய நிலப்பரப்பு மற்றும் தீவுகளின் பாதுகாப்பையும், C-band-ல் வளைகுடா நாடுகள், ஏராளமான ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய விரிவாக்கப்பட்ட பாதுகாப்பை வழங்கும் என இஸ்ரோ கூறியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே