அடுத்த சாதனைக்கு தயாராகும் இஸ்ரோ

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் வருகிற டிசம்பர் மாதம் 25ம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

இந்த செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட் – 3 செயற்கைகோள் மற்றும் 13 நானோ வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இந்த 13 நானோ செயற்கைக்கோள்களும் அமெரிக்காவுக்கு சொந்தமானவை. இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பாயும் 74-வது ராக்கெட் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த செயற்கைக்கோள் 509 கிலோமீட்டர் உயர சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு, நாட்டின் சீதோஷ்ண நிலை மற்றும், பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளையும் அதி துல்லியமாக படம் பிடித்து அனுப்பும். மேலும் இந்த செயற்கைகோள் அண்டை நாடுகளின் ராணுவ நிலைகள், பயங்கவாதிகளின் பதுங்கு குழிகள், மறைவிடங்கள் போன்றவற்றையும் துல்லியமாக படம்பிடித்து அனுப்பும் என்றும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

டிசம்பர் 25-ம் தேதி விண்ணில் செலுத்த உள்ள கார்டோசாட்-3 செயற்கைகோளுக்கான கவுண்டவுன் வரும் 23-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 401 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே