தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை அமைப்பை டிஆர்டிஒ வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.

இஸ்ரேல் தொழில்நுட்ப உதவியுடன் இந்திய ராணுவத்திற்காக டிஆர்டிஒ இதனை உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரி நாடுகளின் விமானங்கள், டிரோன்கள், ஏவுகணைகள் ஆகியவற்றை தாக்கி அழிக்க முடியும்.

அனைத்து பருவ காலங்களிலும் 360 டிகிரி கோணத்தில் சுழலும் நவீன ரேடார் கருவியும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளதால், இலக்கை துல்லியமாக கண்டறிந்து தாக்குதல் நடத்த முடியும்.

நான்கரை மீட்டர் நீளமுள்ள ஏவுகணைகள் மூலம் 60 கிலோ எடை வரையிலான அணு ஆயுதங்களையும் ஏந்திச் சென்று தாக்குதல் நடத்தலாம்.

இதன் தாக்குதல் இலக்கு தூரத்தை 150 கிலோ மீட்டராக அதிகரிக்க டிஆர்டிஒ திட்டமிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே