ரயில் நிலையத்தில் தாயுடன் உறங்கிய பெண் குழந்தை கடத்தல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்தவரின் குழந்தை கடத்தப்பட்டது குறித்து, சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அசாம் மாநிலம் கவுஹாத்தியைச் சேர்ந்த மர்சீனா என்பவர், தனது நண்பரான அமித் என்பவருடன் சென்னை வந்தார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடையில் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது, மர்சீனாவின் 2 பெண் குழந்தைகளில் ரஷிதா என்ற 2 வயது குழந்தை காணாமல் போனது.

இதுகுறித்து, சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒருவன் குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கடத்திய நபரை தேடி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே