சாலை விபத்துகளை குறைப்பதில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் தேர்வு

சாலை பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்த சிறந்த மாநிலம் என்ற விருது தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

சாலை விரிவாக்கம், ஆபத்தான வளைவுகளை மாற்றுதல், தேவையான பாதுகாப்பு அறிவிப்புப் பலகைகள், சிக்னல்கள் என விபத்துக்களை குறைக்கும் நடவடிக்கைகளை எடுக்கும் மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இதை அடுத்து இதற்கான விருதை, டெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் வழங்கினார்.

முன்னதாக சாலை பாதுகாப்பிற்காக தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசின் போக்குவரத்து ஆணையாளர் விவரித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே