“இப்போது நாங்கள் மூன்று பேர்” – அனுஷ்கா சர்மா கர்ப்பிணியாக உள்ள புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா ஆகியோர் 2017 ஆம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.

நாங்கள் இருவரும் எதையும் மறக்கவில்லை, எங்களுக்குள் இருப்பது சாதராணமான உறவுதான் என்று 2014 ஆம் ஆண்டு அனுஷ்கா ஷர்மா கூறியிருந்தார்.

ஆனால் மூன்று வருடங்களுக்கு பிறகு நன்பர்கள், நெறுங்கிய உறவினர்கள் மத்தியில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

அதன் பிறகு புது டெல்லியிலும், மும்பையிலும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இப்போது நடிகை அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருப்பதை அவருடைய கணவர் விராட் கோலி அறிவித்துள்ளார்.

விராட் கோலி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “இப்போது நாங்கள் மூன்று பேர். புது நபர் ஜனவரி 2021 ஆம் ஆண்டு வருவார்’ என்று பதிவிட்டுள்ளார்.

விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா இருவரின் இந்த பதிவையடுத்து பலரும் அவர்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே