சமூக வலைதளத்தில் பெண்களை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டவர் கைது!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜோ மைக்கல் பிரவீன் கைது செய்யப்பட்டுள்ளார். 

பெண்கள் மற்றும் பெண்களுக்கு ஆதரவாக பேசும் அமைப்பினரை இழிவுபடுத்தும் வகையில் ஜோ மைக்கல் பிரவீன் சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

இது தொடர்பாக தேசிய மகிலா காங்கிரஸ் பொதுச் செயலாளர் அப்சரா ரெட்டி மற்றும் அழகு கலை நிபுணர் ஜெயந்தி ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜோ மைக்கல் பிரவீனுக்கு அடையாறு மகளிர் காவல் துறையினர் 2 முறை சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் பெண் காவலர்களையும் ஜோ மைக்கல் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே