தேர்தலில் செல்லாத வாக்குகள் – வாக்காளர்கள் கவனத்திற்கு

ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. இதில் நாளை நடைபெற இருக்கும் முதல் கட்ட தேர்தலில் எத்தனை பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

முதற்கட்ட ஊரக ஊராட்சி தேர்தலில், 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த பதவிகளுக்கு கட்சி சார்ந்த வேட்பாளர்களும், சுயேச்சைகளும் போட்டியிடுவார்கள். மஞ்சள் வண்ணத்தில் வாக்கு சீட்டு வழங்கப்படும்.

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் 2546 பதவிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த பதவிகளுக்கும் அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், சுயேச்சைகளும் போட்டியிடுவார்கள்.

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினரை தேர்வு செய்வதற்கான வாக்குச்சீட்டு பச்சை வண்ணத்தில் வழங்கப்படும்.

4 ஆயிரத்து 700 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு கட்சி சின்னம் ஏதுமின்றி சுயேச்சையாக மட்டுமே வேட்பாளர்கள் போட்டியிட முடியும். இந்த பதவியை தேர்வு செய்வதற்கான வாக்குச்சீட்டு இளஞ்சிவப்பு நிறத்தில் வழங்கப்படும்.

37 ஆயிரத்து 830 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த பதவிகளுக்கும் சுயேச்சையாக மட்டுமே போட்டியிட முடியும். வாக்களிக்க வெள்ளை நிற வாக்கு சீட்டு வழங்கப்படும்.

தேர்தலில் செல்லாத வாக்குகள் பதிவு செய்வதை எப்படி தவிர்க்கலாம் என்பதை பார்க்கலாம்.

6 காரணங்கள் வாக்கு சீட்டில் இருந்தால் அது செல்லாத ஓட்டாக கருதப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

  1. முதலாவதாக முத்திரை இல்லாத வாக்குச்சீட்டுக்கள் நிராகரிக்கப்படும்.
  2. சின்னத்தில் இல்லாமல் வெற்றிட பகுதியில் முத்திரை பதிந்திருந்தால் அது நிராகரிக்கப்படும்.
  3. ஒன்றுக்கும் மேற்பட்ட சின்னங்களில் முத்திரை பதிக்கும் நிராகரிக்கப்படும்.
  4. வாக்காளரின் அடையாளத்தை வெளிப்படுத்தும் நோக்கில் வாக்குச்சீட்டில் ஏதேனும் குறியீடுகளை குறிப்பிட்டு இருந்தால் அதுவும் ஏற்கப்பட மாட்டாது.
  5. கசங்கிய நிலையில் இருக்கும் வாக்குச் சீட்டு மற்றும்
  6. வாக்குச்சீட்டு உண்மைத் தன்மைக்கு மாறாக இருந்தால் அதுவும் ஏற்கப்படாது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே