குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் : தமிழகம் இரண்டாமிடம்..!!

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

நாடு முழுவதும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்து 522 மாவட்டங்கள் மற்றும் 100 ரயில் நிலையங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் ஆய்வு நடத்தியது.

நடப்பாண்டு ஆய்வறிக்கையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் பதிவான மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. அங்கு 1742 வழக்குகள் பதிவாகியுள்ளன.

985 வழக்குகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அடுத்தப்படியாக மகாராஷ்டிர மாநிலத்தில் 436 வழக்குகள் பதிவாகின.

ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களே குழந்தைகளிடம் அதிகம் தவறாக நடந்துக் கொண்டு இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே