உள்ளாட்சி தேர்தல் : 1 மணி நிலவரப்படி 35.35 சதவீதம் வாக்குப்பதிவு

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 27-ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

இந்த நிலையில் 2-வது கட்ட தேர்தல் 27 மாவட்டங்களில் உள்ள 158 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வருகிறது.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 1 மணி நிலவரப்படி 35.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்

கன்னியாகுமரி – 39.52 சதவீதம்
திண்டுக்கல் – 47.97 சதவீதம்
திருச்சி – 46.50 சதவீதம்
சேலம் – 49.40 சதவீதம்
கரூர் – 53.69 சதவீதம்
நீலகிரி – 35.09 சதவீதம்
நாமக்கல் – 51.90 சதவீதம்
விருதுநகர் – 50.16 சதவீதம்
தூத்துக்குடி – 43.99 சதவீதம் ஈரோடு – 48.62 சதவீதம்
தேனி – 50.09 சதவீதம்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே