முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், எத்தனை பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெற உள்ளது என்ற விவரத்தை தற்பொழுது பார்க்கலாம்.
தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களை தவிர்த்து மொத்தம் உள்ள 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான பதவி இடங்களில் முதற்கட்டமாக 260 பதவிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
5067 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் முதற்கட்டமாக 2546 பதவிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் 23 பதவிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
9624 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளில் முதற்கட்டமாக 4 ஆயிரத்து 700 பதவிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதில் 410 பதவிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
76746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளில் முதற்கட்டமாக 37 ஆயிரத்து 830 இடங்களுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதில் 18137 பதவிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.