அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு விடுப்பு இல்லை..!

போக்குவரத்து ஊழியர்களுக்கு நாளை விடுப்பு ரத்து செய்யப்படுவதாக மாநகர சென்னை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து கழக நிர்வாக மேலாண் இயக்குநர் விடுத்துள்ள சுற்றறிக்கையில், போக்குவரத்து கழக ஊழியர்கள் அனைவரும் நாளை கண்டிப்பாக பணிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியர்களுக்கு நாளை வழங்கப்பட்ட விடுப்பு ரத்து செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து போராட்டங்கள் நடத்தி தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தின.

இதனை தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் சமீபத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னையில் நாளை பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னையில் திமுக கூட்டணி சார்பில் நாளை போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை பணிக்கு கட்டாயம் வர வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனிடையே போக்குவரத்துக் கழக உத்தரவை மீறி சிஐடியு, எல்பிஎஃப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே