நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது ஏன்? : அமைச்சர் காமராஜ் விளக்கம்

குடியுரிமை திருத்த சட்டத்தால் தமிழகத்தில் வாழும் சிறுபான்மை யினருக்கு பாதிப்பு ஏற்படாது என மத்திய அரசு உறுதி அளித்ததன் பெயரிலேயே அதிமுக ஆதரவு அளித்ததாக அமைச்சர் காமராஜ் விளக்கமளித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த சேரி, பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாட்டில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் ஆதரித்து உள்ளதாக தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்தால் தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது என மத்திய அரசு உறுதி அளித்ததன் அடிப்படையிலேயே அதிமுக ஆதரவு அளித்ததாகவும் அமைச்சர் காமராஜ் விளக்கமளித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே