அதிமுகவின் 48ஆவது ஆண்டு தொடக்கவிழா: எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை

அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, வைத்தியலிங்கம், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பின்னர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இணைந்து அதிமுக கொடியை ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து இருவரும் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இரண்டு தொகுதிகளில் சட்டப்பேரவை இடைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பெரும்பாலான அமைச்சர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால், தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பலர் பங்கேற்கவில்லை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை எதிர்த்து போட்டியிடுவாரா?? என்று மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு, எந்த சவாலையும் ஏற்க தயார் என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே