உச்சநீதிமன்றம் சென்றிருப்பதன் மூலம், உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை திமுக விரும்பவில்லை என்பது தற்போது உண்மையாகியுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், யார் தடுக்க முயற்சித்தாலும் உள்ளாட்சி தேர்தல் நிச்சயமாக நடைபெறும் என்றார்.
மாவீரர் நாளன்று சீமான் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயகுமார், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வருவோம் என்று கூறுவது, கடல் எப்போது வற்றுவது, கொக்கு எப்போது கருவாடு திண்பது என்ற கதைதான் என விமர்சித்தார்.