மக்களை போராடக் கூடாது என்று சொல்ல எந்த அரசுக்கும் உரிமை கிடையாது : நடிகர் சித்தார்த்

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடுவதற்கு மாணவர்களுக்கு உரிமை உள்ளது என நடிகர் சித்தார்த் கூறினார்.

குடியுரிமை சட்ட திருத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 30க்கும் மேற்பட்ட அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் சித்தார்த், பேராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

ஆதரவு தெரிவித்த நடிகர் சித்தார்த் பின் செய்தியாளர்களிடம் பேசும் போது, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட மாணவர்களுக்கு உரிமையுள்ளது என்றும்; மாணவர்கள் வன்முறைக்கு செல்லாமல் அமைதியான முறையில் குரல் கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே