விஜயா வங்கி ஏடிஎம் மையத்திற்கு பணம் நிரப்ப வந்த நபர் 52 லட்ச ரூபாயுடன் தப்பியோடிய நிலையில் போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை வேளச்சேரி விஜயநகர் முதல் பிரதான சாலையில் உள்ள விஜயா வங்கி ஏடிஎம் மையத்திற்கு பணம் நிரப்ப சி.எம்.எஸ் நிறுவனம் சார்பில் 87 லட்ச ரூபாயுடன், சைலோ காரில் நான்கு நபர்களுடன் தேனாம் பேட்டையில் இருந்து 5 ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பிவிட்டு வேளச்சேரி வந்த போது வாகனத்தில் இருந்த மூவரும் ஏடிஎம்மில் பணம் நிரப்பிக் கொண்டிருந்த போது 52 லட்ச ரூபாய் பணத்துடன் ஓட்டுநர் ஆம்புரோஸ் தப்பிச் சென்றார்.
துப்பாக்கி ஏந்திய பாதுகாவல் இல்லை. சம்பவம் குறித்து நிகழ்விடத்தில் வேளச்சேரி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை தெற்கு இணை ஆணையர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். தப்பிய ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.