நித்தியானந்தா இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தார் : முன்னாள் சீடர்

சாமியார் நித்தியானந்தா 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவரது முன்னாள் சீடர் குற்றம்சாட்டியுள்ளார். 

சாமியார் நித்தியானந்தாவின் முன்னாள் சீடரான விஜயகுமார், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

நித்தியானந்தா ஆசிரமத்தில் 11 ஆண்டுகள் இருந்ததாகவும், தமக்கு நித்தியானந்தா பாலியல்  தொல்லை அளித்ததாகவும் மனுவில் கூறியுள்ளார்.

தமக்கு சேர வேண்டிய 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் நித்தியானந்தா வசம் இருப்பதாகவும், அவற்றை மீட்டு தர வேண்டும் எனவும் விஜயகுமார் வலியுறுத்தியுள்ளார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயகுமார், நித்தியானந்தா பல இளம்பெண்களுக்கும், ஆண்களுக்கும் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம்சாட்டினார்.

நித்தியானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமங்களை நடிகை ரஞ்சிதா நிர்வகித்து வருவதாக தெரிவித்த விஜயகுமார், ஆசிரமத்தில் இருந்து தாம் வெளியேறியதால் நித்தியானந்தா தரப்பினர் தமது குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுத்து வருவதாகவும் புகார் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே