உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்களுக்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் இன்று வெளியிடப்பட்டது.

ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் தங்கள் மாவட்டத்தின் வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டனர்.

இதையடுத்து, இந்த பட்டியல் அரசியல் கட்சிகளுக்கு நாளை வழங்கப்படும் என்றும், அதோடு அக்டோபர் 15ம் தேதி வரை அனைத்து வார்டுகளிலும் மண்டல அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் பட்டியலில் தங்கள் பெயரை சரிபார்த்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும், இதன் காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரு இடத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகள், பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், உள்ளாட்சி தேர்களுக்காக தமிழகம் முழுவதும் 92721 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் லலிதா வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை வாக்காளர்கள் சரிபார்த்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே