புகை மற்றும் பனிமூட்டத்தால் சென்னையில் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள்

ராணிப்பேட்டை அருகே வாலாஜப்பேட்டையில் பனிமூட்டம் காரணமாக 9 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயமடைந்தனர்.

சுங்கச்சாவடி அருகே மேம்பாலத்தில் வழக்கத்தை விட அதிகமாக பனிமூட்டம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முன்னே சென்ற வாகனம் அருகில் சென்ற போதுதான் தெரிந்ததால் வேலூரில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்றுக் கொண்டிருந்த கண்டெய்னர் லாரி, திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கண்டெய்னர் லாரிக்கு பின்னால் வந்து கொண்டிருந்த 2 லாரிகளும், 6 கார்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 11 பேர் படுகாயமடைந்தனர்.

மேலும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே