கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க வங்கியில் பணம் எடுக்க புதிய நடைமுறை

வங்கிகளில் பணமெடுக்க மக்கள் கூடுவதை தடுக்க இந்திய வங்கிகள் சங்கம் புதிய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.

மாத தொடக்கத்தில் வங்கிகளில் அதிக கூட்டம் கூடுவதால் சமூக இடைவெளியை வாடிக்கையாளர்கள் முறையாக கடைப்பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

இதையடுத்து வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி வங்கிகளில் பணம் எடுக்க வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட தேதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வங்கி கணக்கு எண்ணின் கடைசி இலக்கம் 0 மற்றும் 1 உடையவர்கள் மே 4-ம் தேதி பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.

அதேப்போல் 2 மற்றும் 3 உள்ளவர்கள் மே 5-ம் தேதி தங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம்.

4 மற்றும் 5 கடைசி இலக்கங்களை கொண்டவர்கள் மே 6-ம் தேதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் 6 மற்றும் 7 இலக்கங்களை கொண்ட வாடிக்கையாளர்கள் மே 8-ம் தேதியும், 8 மற்றும் 9 இலக்கங்களை கடைசியாக கொண்டவர்கள் மே 11-ம் தேதியும் பணத்தை எடுக்கலாம்.

இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் மே 11-ம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

அதற்குபின் வழக்கம் போல் யார் வேண்டுமானாலும் எந்த தேதியிலும் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே