நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 41 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வழியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 41ஆவது கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கு வரி வருவாய் இழப்பை ஈடு செய்வதற்கான நிதியை ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜிஎஸ்டி நடைமுறையால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடு செய்யும் பொருட்டு மத்திய அரசு இழப்பீட்டுத் தொகையை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் மாநிலங்களுக்கான வருவாய் பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 41 ஆவது கூட்டம் நடைபெறுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் காணொலி மூலம் நடைபெறுகிறது. 

இதில் கடுமையான வரி வருவாய் பற்றாக்குறையும், அதை ஈடு செய்ய மத்திய அரசு வரி வருவாயை திரும்ப அளிக்க மறுத்துவருவது குறித்தும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில அரசுகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன.

இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்களுடன் மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூரும் பங்கேற்கிறார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் மாநிலங்களுக்கான வரி வருவாய் இழப்பை ஈடு செய்வதற்கான நிதி ஒதுக்குவது குறித்தும்; அட்டார்னி ஜெனரல் கருத்து குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தனர்.

ஜிஎஸ்டி இழப்பீடு குறித்து அட்டர்னி ஜெனரல் கே கே வேணுகோபால் அண்மையில் கூறுகையில் மாநிலங்களுக்கு ஏற்படும் ஜிஎஸ்டி வரி வருவாய் பற்றாக்குறையை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும் என்று சட்டப்படி கட்டாயம் ஏதும் இல்லை.

இந்த வரி வருவாயை சரி செய்ய சந்தைக் கடன், செஸ் விகிதத்தை உயர்த்துவது போன்ற நடைமுறைகளை பின்பற்றி மாநிலங்கள் வரி வருவாயை ஈடுகட்டலாம் என வேணுகோபால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே