தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.25 ரூபாயும், டீசல் விலை 2.50 ரூபாயும் உயர்கிறது.
கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் மிகப் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளது.
அதனால், கச்சா எண்ணெய்யின் விலையும் கடுமையாகச் சரிந்துள்ளது.
இருப்பினும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.
இதற்கிடையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது.
அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோலுக்கான மதிப்பு கூட்டு வரி 28 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாகவும் டீசல் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
அதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.25 ரூபாயும், டீசல் விலை 2.50 ரூபாயும் உயர்கிறது.