தமிழக மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க அமெரிக்காவில் இருந்து நிபுணர்கள் வரவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே சிறுவலூர், கவுண்டம்பாளையம், பாரியூர், வெள்ளாளபாளையம் உள்ளிட்ட இடங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் துவங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக தெரிவித்தார்.
மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகும் விதமாக அமெரிக்க வாழ் தமிழ் ஆசிரியர்களை கொண்டு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.