ராஜீவ் கொலை வழக்கு : பேரறிவாளன் மனு – நவ.5 விசாரிக்க நீதிபதி ஒப்புதல்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடுத்த வழக்கு ஓராண்டுக்கு பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

1991 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரைக்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் தமக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி கடந்த ஆண்டு பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

தன் மீதான குற்றச்சாட்டும் மெய்ப்பிக்கபடவில்லை என்றும் மனுவில் அவர் கூறியிருந்தார்.

கடந்த ஓராண்டில் பேரறிவாளனின் மனு, சிலமுறை விசாரணைக்காக பட்டியலிடப்பட்டு பின்னர் நீக்கப்பட்டுள்ளது.

தற்போது மீண்டும் நவம்பர் 5 ஆம் தேதி பேரறிவாளன் வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இம்முறை வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் பட்டியலில் இருந்து நீக்க கூடாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி ரமணாவிடம் பேரறிவாளனின் வழக்கறிஞர் பிரபு முறையிட்டார்.

அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை நவம்பர் 5 ஆம் தேதி விசாரிப்பதாக கூறி இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே