ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் வெற்றி பெற்றது இந்திய அணி.

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் டி 20 கான்பெராவில் இன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை அடித்தது.

இந்திய அணியில் கே.எல்.ராகுல் 51 ரன்களும், ஜடேஜா 44 ரன்களும் சஞ்சு சாம்சன் 23 ரன்களும் அடித்தனர்.

ஆஸ்திரேலிய அணி வீரர் மொய்சஸ் ஹென்ரிகியூஸ் சூப்பராக பந்துவீசி 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

162 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் டி ஆர்சி ஷார்ட் 34 ரன்களும், ஆரான் பின்ச் 35 ரன்களும் அடித்தனர். 

மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாற மொய்சஸ் ஹென்ரிகியூஸ் மட்டுமே நிதாமான விளையாடி 30 ரன்கள் அடித்தார்.

ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் 15 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டதால் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது.

இந்திய அணியில் டி நடராஜன் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

டி நடராஜனுக்கு இது முதல் சர்வதேச டி 20 போட்டியாகும்.

இதேபோல் சாஹல் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். தீபக் சாஹர் 1 விக்கெட்டையும் எடுத்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே