டாஸ் வென்ற ராஜஸ்தான்..; டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங்..!!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசனின் 7-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் அணியில் வெளிநாட்டு வீரர்களாக கிறிஸ் மாரிஸ், ஜோஸ் பட்லர், டேவிட் மில்லர், முஸ்தபிஸூர் ரஹ்மான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெல்லி கேபிடல்ஸ் அணியில் மார்கஸ் ஸ்டாய்னிஸ், ரபாடா, கிறிஸ் வோக்ஸ் மற்றும் டாம் கரண் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே