பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி..!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 39 தலைவராக சவுரவ் கங்குலி இன்று பதவி ஏற்றிருக்கிறார்.

ஐ.பி.எல். சூதாட்டப்புகார்களைத் தொடர்ந்து, பிசிசிஐ நிர்வாகத்தை உச்சநீதிமன்றம் தனது கட்டுப்பாட்டில் எடுத்தது.

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வினோத் ராய் தலைமையில் பிசிசிஐயை நிர்வகிக்க குழு அமைக்கப்பட்டது. கடந்த 33 மாதங்களாக அந்தக் குழு, பிசிசிஐயை நிர்வகித்து வந்தது.

இந்த நிலையில் அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களும் கூடி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆலோசனை நடத்தின.

அப்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை, பிசிசிஐ தலைவராக்குவதென ஒருமனதாக முடிவெடுத்தன.

இதன் காரணமாக தனிப்பெரும்பான்மையுடன் போட்டியின்றி அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

செயலாளர் பதவிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டார். அவர்கள் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.

மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் சவுரவ் கங்குலி முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே